மட்டக்களப்பில் இரவு நேர கடமையில் இருந்த காவலாளி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வைத்தியசாலையில் இரவு நேர கடமையில் இருந்துவந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சுமார் 55 வயது மதிக்கத்தக்க சி. சிவசீலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.