கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு கடற்படை அதிகாரிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த 11 இளைஞர்களும் தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டனர்.
இதேவேளை 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைதுசெய்யப்பட்டு, சரீரப் பிணையில் கடந்த 05 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.