அரசியலமைப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளார் என்பதை தற்போது உயர்நீதிமன்றமே பகிரங்கப்படுத்தி விட்டது. கிடைக்கப் பெற்ற தீர்ப்பினை மதித்து செயற்பட வேண்டும் . சர்வாதிகார போக்குடன் செயற்பட முனையும் அரச தலைவர்களுக்கு இன்றைய தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி செயற்பட்டால் அவருக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தற்போது ஒரு கொண்டு வந்தால் நிச்சயம் வெற்றிப் பெறும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப்பிரேரனையினை கொண்டு வருவதற்கு பல ஆதாரங்கள் இன்று பகிரங்கப்படுத்ததப்பட்டுள்ளது. தனது விருப்பத்தின் பெயரில் செயற்பட்டால் நாட்டு நலன் கருதி நாங்கள் குற்றப்பிரேரனையினை கொண்டு வருவோம் என்றார்.