மீண்டும் பிரதமராகிறார் ரணில்.

163

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பித்த அரசியல் நெருக்கடி நிலை தொடர்ந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளை அடுத்து இலங்கை அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.

இதேவ‍ேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நாமல் ராஷபக்ஷ அறிவித்திருந்தார்.

இந் நிலையிலேயே பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE