தமிழ் பிரதேசங்களை ஊடுருவி சிங்கள மக்களை குடியேற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் நீண்ட காலமாகவே சிங்கள ஆட்சி அரசுகளால் மாறி மாறி கொண்டுவரப்பட்டது.
கே: தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தை விமர்சித்திருந்தது கடந்த 3 ½ வருடங்களாக ஆனால் பாராளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான செயற்பாட்டை நீங்கள் முன்னெடுத்து வருகின்றீர்கள் ஆகவே இது வந்து உங்களுடைய இரட்டை வேடத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
ப : அது தான் உங்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கின்றோம். ஒரு இக்கட்டான இந்த அரசியல் சூழலில் நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து அன்று செயற்படாமல் விட்டிருந்தால் நிச்சயமாக மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்து இருக்கும். எனவே அந்த ஆட்சியை தொடர விட முடியாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. அது மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட முடிவு அதை அரசியல் சார்ந்து நாங்கள் எடுத்ததாக விமர்சிப்பதில் பிரயோசனம் இல்லை. அதை தான் நான் உங்களுக்க சொல்லுகின்றேன். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் சில பத்து ஊடகவியலாளர்கள் காணாமல் போய் இருந்தார்கள். நீங்கள் யாராவது குரல் குடுக்கக் கூடிய நிலையில் இருக்கவில்லை. எங்களது இனப்படுகொலை அப்பட்டமாக நடந்த பொழுது சிங்கள ஊடகங்கள் அதற்காக தாங்கள் மௌனம் காத்து அந்த இனப்படுகொலையை வெளியே கொண்டுவர தடுத்து நின்றார்கள். ஆனால் தமிழ் ஊடகத்துறைகள் அதை வெளிக்கொண்டுவர பயப்படுகின்றார்கள். எனவே இன்று உள்ள ஜனநாயக சூழலில் சகலருக்குமான உரித்துகள் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இன்று ஒரு ஊடகவியலானரை சும்மா எடுத்தபாட்டில் கைது செய்யமுடியாது. கைது செய்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முடியாது. கைது செய்வதாக இருந்தால் சரியாக காரணம் காட்ட வேண்டும். உடனடியாக ஒரு ஊடகவியலாளர் தனக்கான சட்டவியலாளரை அணுக முடியும். நீதி மன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் சேர்ப்பிக்கபட வேண்டும். குற்றங்கள் எழுத்து மூலம் கொடுக்கப்பட வேண்டும். அப்படியாக ஒரு பாதுகாப்பு அங்கே ஏற்படத்தப்பட்டிருக்கின்றது.
கே : குறிப்பாக ஊடகவியலாளர்களை இவ்வாறு குரல் கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை சுமத்துகின்ற நீங்கள் குறிப்பாக இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்புகளுடன் விஷேட அதிரடி படை பாதுகாப்புக்களுடன் இருந்த காலத்தில் கூட ஊடகவியலாளர்களுக்காக முன் நின்று உழைக்காத அல்லது அவர்களுக்காக குரல் கொடுக்காத பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு நியாய பூர்வமானதா?
ப : நிச்சயமாக நியாயமற்றது ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த அராஜகங்கள் அந்தளவு தூரம் சகலரதும் செல்வாக்குச் செலுத்தியது என்பது இதிலிருந்து நீங்களே சொல்லுகின்றீர்கள். எனவே அதே காலத்தில் நான் அரசியலில் இருக்கவில்லை. அந்த அரசியலில் இருந்தவர்களுக்கும் உங்களைப் போல் ஒரு நெருக்கடி நிலைமை இருந்திருக்கும் அதே போல் பொது மக்களுக்கும் அதைவிட பெருந்தொகையான நெருக்கடி இருந்தது என்பது தான் உண்மை எனவே அப்படியான ஒரு நெருக்கடியை மீண்டும் மக்களில் திணிக்க விரும்பவில்லை. அண்மையில் இவர்கள் பொறுப்பெடுத்த சிறிது காலத்துக்குள்ளேயே ஊடகத்துறைகள் சார்பாக அவர்கள் எடுத்த சில நடவடிக்கைகள் இப்பொழுது விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் ஒரு ஊடகத்துறையின் பணிப்பாளர் விசாரணைக்காக அழைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இதில் இருந்து நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் இந்த மக்களுக்கான சுமூகமான வாழ்வியல் அவர்களுக்கான சுதந்திரங்கள்; இங்கு இருப்பதை நிலைநிறுத்த வேண்டிய ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்துள்ளது.
கே : குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவினுடைய ஆட்சி வர வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பிய காலத்திலிருந்து அரசியல் தீர்வு மற்றும் அரசியல் கைதிகளினுடைய விடுதலை என்பவற்றை மையமாகக் கொண்டு தான் ஆதரவு தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவ்வாறு ஏதேனும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றதா?