விடுதலை புலிகளின் மாற்றீடு அகில இலங்கை தமிழ் காங்கிரசா?

205

 

விடுதலை புலிகளின் மாற்றீடு அகில இலங்கை தமிழ் காங்கிரசா?

துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என விமர்சிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் வழங்கியது?

ஈழ போராட்டதில் இவர்கள் வகித்த வகிபாகம் என்ன?

தந்தைக்கு மாமனிதர் பட்டம் வழங்கியதன் மூலம் மகன் மாவீரன் ஆகிவிடமுடியுமா?

2009 ன் பின் இவர்கள் நிர்கதியான போராளிகள் பொதுமக்களுக்கு செய்த சேவையை கூறமுடியுமா?

வருடம் ஒருநாள் வரும் மாவீரர் நினைவு நாளில் கல்லறையை துப்பரவு செய்து சுடர் ஏற்றுவதன் மூலம் இவர்கள் விடுதலை புலிகளின் மாற்றீடு நாம் போன்று வாய்க்கு வந்தபடி ஏகவசனத்தில் இதர அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கு நீங்கள் யார்?

நீங்கள் போராட்டத்தின் மூலம் என்ன சாதனை செய்தீர்கள்? அரசியலில் புகுந்து ஐந்து லட்சம் மலையக தமிழரை நாடவற்றவர் ஆக்கியதை விட என்ன சாதனை செய்தீர்கள்?

இந்த மண்ணில் விடுதலை போராட்டத்தில் தனது சொத்து சுகத்தையும் பிள்ளைகளையும் இழந்த நிறைய தனவந்தர்கள் எம் மத்தியில் வாழ்கின்றனர்.

பரம்பரை பணக்காரர் தாம் என பீற்றும் பொன்னாரும் பிள்ளைகளும் தமிழ் மக்களுக்காக எதை வழங்கினர் வரலாற்றில்?

விடுதலை புலிகளும் பிற ஆயுத அமைப்பும் தமக்குள் மோதுக்கொண்டர் மறுபடியும் பகை மறந்து தமக்குள் ஓன்றுபட்டனர். இடையில் நீங்கள் ஏன் மல்லுகட்டுறிகள் அவன் துரோகி இவன் ஓட்டுக்குழு என பொன்னாரின் பேரப்பிள்ளை ஆயுதம் ஏந்த போறரோ?

ஏன் இந்த அமர்களம் பதவிக்காகவும் கதிரைக்காகவும் அடிபடும் போது வேலுபிள்ளையின் வாரிசு மாதிரி சீன் போடதீர்.

சயிக்கிள் சயிக்கிள்தான் அது ஏரோ பிளேன் ஆகமுடியாது.

SHARE