அமெரிக்காவில் ஒரே நாளில் பணக்காரரான முதியவர்

176

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் ஒருவேளை உணவால் ஒரே நாளில் பணக்காரர் ஆகியுள்ளார்.

ரிக் அந்தோஷ் எனும் முதியவர் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

அவர் தினமும் அங்கிருக்கும் உணவு விடுதியில் இரவு உணவு சாப்பிட செல்வது வழக்கம்.

வழக்கம்போல, 1000 ரூபாய் மதிப்புள்ள கடல் சிப்பியில் செய்யப்படும் உணவை அவர் ஆர்டர் செய்துள்ளார். அதனை உண்ணும் பொழுது வாயில் உருண்டை வடிவில் ஏதோ சிக்கியுள்ளது. அதனை வெளியே எடுத்து பார்க்கும்பொழுது அது வெண்ணிற முத்து என அவருக்கு தெரிய வந்தது.

இது குறித்து கூறியுள்ள அவர், 1000 ரூபாய் மதிப்புள்ள உணவு சாப்பிட்ட எனக்கு 3 லட்சம் மதிப்புள்ள இந்த புதையல் கிடைத்துள்ளது. முதலில் அது என் வாயில் சிக்கியபொழுது எனது பல்தான் உடைந்துவிட்டதாக நினைத்தேன்.

பின்னர் வெளியே எடுத்து பார்த்தபொழுதுதான் அது ஒரு முத்து என உணர்ந்தேன். 28 ஆண்டுகாலமாக இந்த உணவகத்தில் தான் நான் சாப்பிடுகிறேன், இனியும் தொடர்ந்து இங்கு வருவேன் என்று கூறியுள்ளார்.

SHARE