உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பகிஸ்கரிப்பு போராட்டத்தில் தோட்ட மக்கள்.

198

கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும்  இருவருக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடைப் பகுதி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக் கோரியும்,கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் விலகிவிடல் வேண்டுமென்று கோரியும் மலையக இளைஞர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாகவே வெலிமடைப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேலும் தமக்கு அடிப்படை தினச்சம்பளத்தை ஆயிரம் ரூபா என்றடிப்படையில் உயர்த்தி தருமாறு கோரியும் எமது போராட்டத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய வெலிமடைப்பகுதி தோட்ட உதவி நிருவாகியை கண்டித்தும்,எமக்காக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கும் இரு இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துமே பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருப்பதாக தொழிலாளர்கள் பலரும் தெரிவித்தனர்.

இப் போராட்டம் பெருந் தோட்டங்கள் தோறும் விஸ்தரிக்கப்படுமென்றும்,அவர்கள் மேலும் கூறினர்.

SHARE