சிலாபம் – அலாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீ பரவலால் காரணமாக ஏழு வியாபார நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
சிலாபம் நகர சபைக்கு சொந்தமான வீதியோர வர்த்தக தொகுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
அலாவத்தை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள ஏழு கடைகள் தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு கடையில் ஏற்பட்ட தீ பரவலானது ஏனைய கடைக்களுக்கும் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ பரவலால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென்பதுடன் தீ பரவலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சிலாபம் பொலிஸார், சிலாபம் நகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக் காலம் என்பதால் வீதியோர வர்த்தக நிலையங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொருட்கள் அதிகளவு சேமித்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மின்சார கசிவினால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால் பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அலாவத்தை மாநகர சபை மற்றும் பொலிஸார், தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முன்வந்துள்ளனர்.
எரிந்துள்ள சகல வியாபார நிலையங்களையும் அகற்ற அலாவத்தை பிரதேச சபையின் நகர மேயர் குஷான் அபேசேகர ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி குறித்த வியாபார நிலையங்களை அகற்றுவதற்கான நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அலாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.