2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் 8 .4 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்க்கு 20 லட்சத்தில் ஏலத்திற்கு வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை, 8 .4 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
இது அனைவரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், நானே இந்த விலையை எதிர்பார்க்கவில்லை என வருண் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் எனவும் கூறியுள்ளார்.