வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு விஸ்வமடு கிளிநொச்சிப்பகுதிகளுக்கு பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் விஜயம் -அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் களத்தில்

225

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு விஸ்வமடு கிளிநொச்சிப்பகுதிகளுக்கு பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் விஜயம் -அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் களத்தில்

இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

முத்தயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் வான்கதவுகள் இன்று திறந்துவிடபடலாம். இதனால் நீரேந்து பிரதேசங்களை அண்டியுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதிகளில் கடும் மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அவதி நிலையில் உள்ளனர்.

சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டதால் தமது வாழ்வாதாரத்தை இழந்து, புதிய இடத்தில் ஏதோ ஒரு வகையில் தமது வயிற்றுப்பிழைப்பை பார்த்து வந்த மக்கள் இந்த இயற்கை சீற்றத்தினால் மேலதிக பொருண்மிய சிக்கலையும் சந்தித்துள்ளார்கள்.

கிளிநொச்சியில் கடும் மழை. வெள்ளத்தில் மூழ்கியது பல கிராமங்கள், பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு மீட்பு பணியில் இராணுவத்தினர்.

SHARE