
குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.
குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.
ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. சிட்ரேட் குறைபாடு இருப்பதுதான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.
ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம்.