மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டி வெளி பங்கு, ஆட்காட்டி வெளி- பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த வீதியூடாக கறோல் நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் குறித்த வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே குறித்த சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்ட மக்கள் ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை ச.சத்தியராஜ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பங்குத்தந்தை நிலமையை பார்வையிட்டதோடு,மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியதோடு, அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை (26) காலை சம்பவ இடத்திற் சென்ற அடம்பன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர். பின்னார் விசேட தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் தடையங்களை பெற்றுக்கொண்டனர்.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புமையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் மன் நிறுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்களும்,கத்தோழிக்க சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்