வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரம் கிராமமக்களுக்கு அரியாலை சமூகத்தினரால் உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா சமூகத்தினரால் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்சியான நிவாரணபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட புளியம்பொக்கணை,பெரியகுளம்,தரம்புரம்,வட்டக்கச்சி ஆகிய பிரதேச மக்களுக்கு கடந்த 23.12.18ஆம் திகதி உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆனந்தபுரம்,ஒட்டிசுட்டான்,மாங்குளம்,பனிக்கன்குளம்,திருமுறிகண்டி ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன அரியாலை சமூகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற நிவாரண பணிகளில் பத்து லட்சம் ரூபா மதிப்பிலான பொருட்களினை அரியாலை சமூகத்தினர் வழங்கியுள்ளனர்.
இவ் நிவாரண பணிகளில் அரியாலையை சேர்ந்த பெருமளவிலான இளைஞர்கள் கலந்து கொண்டு உதவி பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.