கட்சிக்காக ஜனாதிபதி சில தியாகங்களை செய்ய நேரிடும்-மஹிந்த அமரவீர

193

பொதுஜன பெரமுன முன்னணியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஒன்றிணைந்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் சுதந்திரக்  கட்சியினை பலப்படுத்த வேண்டுமாயின் ஐக்கிய சுதந்திர முன்னணி, பொதுஜன பெரமுன முன்னணியினருடன்  கூட்டணியமைக்க வேண்டும். இதன்போது கட்சிக்காக ஜனாதிபதி சில தியாகங்களை செய்ய நேரிடும்.

அத்துடன் அரசியல் ரீதியில்  ஜனாதிபதி  தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்  என்ற  நம்பிக்கை  காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டாடர்.

SHARE