சுனாமி அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூம் அஞ்சலி நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி தலமையில் நடைபெற்றபோது

126

 

 

 

 

வணக்கம் அன்பு உறவுகளே வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான உறவுகளை தகனம் செய்யப்பட்ட சுனாமி நினைவாலயத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை புதுக்குடியிருப்பு பிரதேச
வணிகர்சங்கம் ,முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் புதுக்குடியிருப்பு பிரதேச அழககசங்கம் , நீலன்அறக்கட்டளை நன்பர்கள் புலம்பெயர் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ப தெ.ப.பொ.கூ சங்கங்களின் நிதிப்பங்களிப்போடும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்போடும் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த எமது உறவுகளின் 14ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் முல்லைமாவட்டத்தின் தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது பொதுச்சுடரினை உயிர்நீத்தவர்களின் பெற்றோர் உறவினர்கள் இணைந்து ஏற்றிவைக்க சம நேரத்தில் அனைத்து உறவுகளுக்குமான ஈகைச்சுடர்கள் அனைவராலும் ஏற்றிவைக்கப்பட்டது நினைவாலயத்திற்கான மலர்மாலையினை புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர்சங்கத்தின் தலைவரும் ஆழிப்பேரலையால் தனது மகனை இழந்த தந்தையுமான செல்வச்சந்திரன் அணிவிக்க மலர்வணக்கத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ஆரம்பித்து வைக்க கலந்துகொண்ட அனைவராலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது இந்து ,கிறிஸ்தவ மத ஆத்மாசாந்திப்பிராத்தனையோடு நினைவுரைகளை சமூகசேவையாளனும் மண்ணில் விதையாகிப்போன மாவீரச்செல்வங்களின் சகோதரனுமான முல்லை ஈசன் முன்னாள் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவருமான அமரத்துவமடைந்த அன்ரனிகெகநாதன் அவர்களின் மகன் பீற்றர் இளஞ்செழியன் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் பிரதி தவிசாளரும் மறைந்த முன்னாள் மாகாணசபையின் உறுப்பினர் கனகசுந்தரசுவாமி அவர்களின் மகன் க.ஜெனமேஜயந் ஓய்வுபெற்றபிரதிகல்விப்பணிப்பாளர்களான நாகரெட்ணம் , பேரின்பநாயகம் வன்னிக்குறோஸ் கலாசாரபேரவையின் மாவட்டதலைவர் சி.நாகேந்திரராசா புதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் சங்கத்தின் தலைவர் செல்வச்சந்திரன் ஆகியோர் நிகழ்த்த சிறப்புரையினை வன்னிமாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிக்குறோஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆற்றினார் இந்நினைவுநிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் செ.பிறேமகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான க.ஜெனமேஜன் அ.தவக்குமார் ,இ.சத்தியசீலன் ,சி.குகநேசன் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கௌரவ பிரதி தவிசாளர் தி.ரவீந்திரன் வன்னிக்குறோஸ் மகளிர் பேரவையின் முல்லைமாவட்டத்தின் தலைவி சு.வளர்மதி ஒட்டுசுட்டான் பிரதேச தலைவி ச.சத்தியவாணி வன்னிக்குறோஸ் முன்பள்ளி கல்விமேம்பாட்டுப்பேரவையின் மாவட்ட தலைவர் க.விமலதாஸ் கலாசாரபேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா செயலாளர் வேதவனம் வணிகர்சங்கத்தின் தலைவர் செல்வச்சந்திரன் செயலாளர் கோல்டன் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியின் பிரதி அதிபர் ச.மகேந்திரராசா தெ.ப.பொ.கூ சங்கத்தின் பொதுமுகாமையாளர்கள் தலைவர்கள் பணியாளர்கள் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் அழகக சங்க உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள் வர்த்தகர்கள் கலைஞர்கள் பொது அமைப்புகள் முன்பள்ளி ஆசிரியர்கள் மதகுருமார்கள் கல்விமான்கள் விளையாட்டுக்கழகங்கள் மக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டு உயிர்நீத்த மக்களின் உறவினர்களோடு இணைந்து ஈகைச்சுடரேற்றி நினைவுகூரந்தனர் வன்னிக்குறோஸ் கலாசாரபேரவையின் செயலாளர் சி.வேதவனம் அவர்களின் நன்றியுரையோடு நினைவு நிகழ்வு நிறைவு பெற்றன

 

 

SHARE