மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி சதமடிக்காவிட்டால், ஓய்வு பெறுவதற்கு ரெடியா என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளது.
இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி, பாக்சிங்டேவான இன்று மெல்போர்னில் துவங்கியது.
இதில்,நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 215 ஓட்டங்கள் எடுத்ததுள்ளது.
கோஹ்லி (47), புஜாரா (68) அவுட்டாகாமல் உள்ளனர். அவுஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் கோஹ்லி சதம் அடிக்கவில்லை என்றால் ஓய்வு பெற கோஹ்லி ரெடியா? என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் நக்கலாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், ஒரு சாலை போட்டோவை போட்டு அது போல மெல்போர்ன் ஆடுகளம் இருப்பதாக தெரிவித்தார். இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், கோலி சதம் அடிப்பார் என தெரிந்து சாக்கு சொல்வதாக பதில் அளித்தார்.
இதைப்பார்த்த ஜான்சன், இதில் எந்த விளையாட்டும் இல்லை. ஒரு வேலை கோஹ்லி சதம் அடிக்கவில்லை என்றால், அவர் ஓய்வு பெற வேண்டும் என வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.