இத்திட்டத்திற்கு ஆதரவாக 20 பேரும் எதிராக 21 பேரும் வாக்களித்துள்ளனர்.இக்கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றது.
கண்டி மாநகர சபையின் 65 வருடகாலமாக ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது வந்தது.
கண்டி மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 19 உறுப்பினர்களும் பொது ஜன முன்னணி சார்பில் 16 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 3 உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இரு உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஒருவர் அடங்களாக 41 உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநகர சபை மேயராக கேசர சேனாநாயக்கவினால் 2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டக்கூட்டம் மாநகர சபை கேட்போர் கூடத்தில் முன்வைத்த போது இத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது.இது தொடர்பாக மாநகர சபை மேயர் கூறுகையில், இத்திட்டம் 14நாட்களின் பின்னர் மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெறும் என்றும் அப்போது நாம் வெற்றி பெறுவோம் என கூறினார்.
இத்திட்டம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தோம்.மீண்டும் முறையான வகையில் வரவு செலவு திட்டம் தயாரித்து சமர்ப்பிப்பதுடன் கடந்த வருடம் எட்டு கோடி ரூபாய் மக்களின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என கேள்வி எழுப்பினர்.