மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர் அணி வீராங்கனை அந்தரத்தில் பறந்து மிரட்டலாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டி ஒன்றில் மெல்போர்ன் ரெனிகடெஸ் அணியும், சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிட்னி அணி 14.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், மெல்போர்ன் அணி வீராங்கனை மெய்ட்லன் பிரவுன் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை, எதிரணி வீராங்கனை லாரென் ஸ்மித் அந்தரத்தில் பறந்து அசத்தலாக கேட்ச் செய்தார்.
https://twitter.com/WBBL/status/1078157597033750529
இதனை சற்று எதிர்பாராத மெய்ட்லன் 33 ஓட்டங்களில் பரிதாபமாக வெளியேறினார். இந்த கேட்ச் பீல்டிங்கில் ஜாம்பவானாக விளங்கிய ஜாண்டி ரோட்ஸின் கேட்ச் போல இருந்தது.