
* 30 வயதான புஜாரா இந்த டெஸ்டில் மூன்று இலக்கத்தை தொட 280 பந்துகளை சந்தித்தார். அவரது மந்தமான செஞ்சுரி இது தான். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 248 பந்துகளில் எட்டிய சதமே மெதுவான சதமாக இருந்தது. 17-வது சதத்தை சுவைத்த புஜாரா, அதிக சதங்கள் அடித்த இந்தியர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளிவிட்டு வெங்சர்க்கார், வி.வி.எஸ்.லட்சுமண் (தலா 17 சதம்) ஆகியோருடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
* இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் இதுவரை 1,138 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை இந்த சிறப்பு ராகுல் டிராவிட்டிடம் (2002-ம் ஆண்டில் 1,137 ரன்) இருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் வசமே இச்சாதனை (2008-ம் ஆண்டில் 1,212 ரன்) உள்ளது. 2-வது இன்னிங்சில் கோலி 75 ரன்கள் எடுத்தால், அந்த அரிய சாதனையும் தவிடுபொடியாகி விடும்.