என் முதல் கதையை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், காமெடி படமாக இயக்க ஆசை – ஜெயம் ரவி

169

2001-ல் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆளவந்தான். இதில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜெயம் ரவி. தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர் படம் இயக்க வேண்டும் என்பதை தனது நீண்ட நாள் கனவாக வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்போது அல்ல. இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன். என் முதல் கதையை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், காமெடி படமாக இயக்க ஆசை. அந்த கதைக்கு யோகி பாபு பொருத்தமாக இருந்தால் அவரை இயக்குவேன்’ என்று கூறியுள்ளார்.
SHARE