கடற்கரையில் மகளுடன் விடுமுறையை கொண்டாடும் டோனி

161

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, சென்னை கடற்கரையில் தனது மகளுடன் விடுமுறையை கொண்டாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்படும் டோனிக்கு பிடித்தமான இடமாக இருப்பது தமிழ்நாடு. அதனால் விடுமுறையை கழிக்க சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை டோனி வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் டோனி தனது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார். ‘காபி டேபிள் புக்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட டோனி, தனது மனைவி ஷாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் சென்னை கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது மகளுடன் அலையை ரசித்து அவர் விளையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

 

SHARE