முளைக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி

223
ஆரோக்கிய சமையல் முளைக்கீரை சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

முளைக்கீரை  – 1 கட்டு

இஞ்சி – 1/4 அங்குலம்

எள், ஓமம் – தலா அரை டீஸ்பூன்
கோதுமை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முளைக்கீரையை சுத்தம் செய்து மண் போக அலம்பி பொடியாக நறுக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சியை மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

கோதுமை மாவில் நறுக்கிய கீரை, அரைத்த விழுது, உப்பு, எள், ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஈரத்துணியில் சுற்றி 1/2 மணி நேரம் வைக்கவும்.

பின்பு எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்குப் புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி, தால், குருமா பொருத்தமாக இருக்கும்.

முளைக்கீரை சப்பாத்தி ரெடி.

SHARE