தெற்கு லண்டனில் உள்ள ஒரு சுய சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு லண்டனின் கிராய்டன் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு சுய சேமிப்பு கிடங்கில், 7.47 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த 120 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதுமே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் ஜன்னல்களை மூடுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீ விபத்தால் இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காட்சியளிக்கிறது.