ரஷ்யாவில் சமையல்  எரிவாயு கசிவால் 4 பேர் பலி

189
ரஷ்யான் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் நடைபெற்ற சமையல் எரிவாயு விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் இன்று திடீரென சமையல்  எரிவாயு கசிவு ஏற்பட்டது.

குறித்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.

தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். குறித்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE