ஜப்பானில் வாகனத்தை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்

200

ஜப்பானில் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய டோக்கியோவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் ஹரயுக்கு என்ற பகுதியி;ல் ஜப்பான் நேரப்படி நள்ளிரவிற்கு பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக வாகனமொன்று பாதசாரிகள் மீது மோதியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

புத்தாண்டு வழிபாட்டிற்காக செல்பவர்கள் நிறைந்து காணப்பட்ட வீதியிலேயே இந்தஅ சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 21 கசுகிரோ குசாகபே என்ற இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் முதலில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்தார் பின்னர் படுகொலை என  தெரிவித்தார் என ஜப்பான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சேதமடைந்த வாகனத்தை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

SHARE