புத்தாண்டு அன்று ஏழுமலையான கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீதேவியின் மகள்கள்

139

நடிகை ஸ்ரீதேவி இன்னும் பலரின் மனங்களில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அடுத்த மாதம் வந்தால் அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்து விடும்.

அவருக்கு குஷி, ஜான்வி என இரு மகள்கள் இருக்கின்றார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார். அவ்வப்போது அவரை பற்றி ஏதாவது செய்திகள் வந்துவிடுகிறது.

அவரின் தங்கை குஷியும் விரைவில் நடிக்கவுள்ளாராம். மேலும் இவர்களின் தந்தை போனி கபூர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் 2019 புத்தாண்டு அன்று மூவரும் திருப்பதி சென்று ஏழுமலையான கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

SHARE