பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபகஷவிற்கு எதிராக நிரந்தர நியாய மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பத் அபேகோன் , சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பத் ஜனகீ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டடது.
மெதமுலன டீ. ஏ. ராஜபக்ஷ நூதன சாலை நிர்மாணப்பணிகளின் போது 33 மில்லியன் ரூபாய் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
ஆயினும் நீதிமன்ற அனுமதியுடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளமையின் ; காரணமாக மேற்படி வழக்கு மீதான விசாரணைககள் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.