இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி 399 இன்னிஸ்க்களில் 19,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கோஹ்லி என்றாலே தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள கோஹ்லி தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது 399 இன்னிங்ஸ்க்களில் 19,000 ரன்கள் எடுத்து சர்வதேச சாதனையை எட்டியுள்ளார்.
இதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தான் 432இன்னிங்ஸ்க்களில் 19,000 பெற்றுள்ளார். இந்நிலையில் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் வேகமாக 19,000 ரன்களை எட்டியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் விராத் கோஹ்லியும் இரண்டாம் இடத்தில் சச்சினும் மூன்றாம் இடத்தில் பிரையன் லாராவும் உள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்த கோஹ்லிக்கு இந்த ஆண்டும் சாதனைகள் தொடர்ந்துள்ளது.
மேலும் சிட்னியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் அவுஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையும் இவருக்கே வந்து சேரும்.