குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தால் 70 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது

197
குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் மக்கள் தொகை குறைந்தது

உலகிலேயே மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக 140 கோடி மக்கள் தொகையிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.

அதற்கு ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே காரணமாகும். இந்த திட்டம் கடந்த 1979-ம் ஆண்டு முதல் மிக கடுமையாக நடை முறைப்படுத்தப்பட்டது.

அதை மீறி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெறாமல் நிறுத்திக் கொண்டனர்.

இதனால் சீனாவில் வழக்கத்தை விட மக்கள் தொகை பெருக்கம் குறைந்து விட்டது. சீனாவில் கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் தேசிய அளவில் ஆண்டுக்கு ஆண்டு 25 லட்சம் என்ற அளவில் மக்கள் தொகை குறைந்து வந்து இருந்தது தெரிய வந்துள்ளது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற அதிரடி திட்டம் கொண்டு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு 7 லட்சத்து 90 ஆயிரம் என்ற விகிதத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வந்தது.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தின் நிபுணர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. யி புஸியான் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிகிறார்.

2018-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் இறப்பு விகிதம் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் ஆக இருந்தது. அதே நேரத்தில் பிறப்பு விகிதம் 12 லட்சத்து 70 ஆயிரமாக மிகவும் குறைந்து விட்டது.

இது போன்ற அதிகமாக மக்கள் தொகை குறைந்து வருவது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஏனெனில் மக்கள் தொகை குறைவதன் மூலம் மனித உழைப்பும் குறையும்.

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பென்சன் மற்றும் சுகாதார மேம்பாடு போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கும். நாட்டின் சமூக வளர்ச்சி பணியில் 7 பேர் பணியாற்றி வரும் சூழ்நிலையில் மக்கள் தொகை குறைந்ததன் காரணமாக 2030 ஆண்டில் அது 4 பேர் என்ற அளவில் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை எற்கனவே அறிந்த சீன அரசு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது. இருந்தும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கவில்லை.

SHARE