கிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம்செலுத்தவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்!!

260

 

கிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம்செலுத்தவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்!!

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வு வவுனியாமாவட்டசிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு கெனடி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவராம் தலமையில் 01.01.2019 ம் திகதி நடைபெற்றது.
திரு கெனடி தலமையிலான உத்தியோகத்தர்கள் கிராமப்புற பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்லாமல் இடைவிலகுவதை பற்றி கிராம மட்டத்தில் ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் செய்திகளை தெரியவந்தது அவற்றில்
இளம் தாய்மார்கள் குடும்ப வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதாலும். தந்தைமாரினால் முறையான பராமரிப்பு இல்லாததனாலும் மாணவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத படியாலும் பாடசாலை செல்ல முடியாமல் உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமாக இருந்தால் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்விகற்பதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்தும் புலம்பெயர்ந்தோரின் நிதியில் இருந்தும் ஒவ்வொருவருடமும் நூற்றுக்கணக்கான வறியமாணவர்களிற்கு நிதிபங்களிப்பை செய்துவரும் அதே நேரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலம்பெயர் மக்களின் நிதி உதவியுடன் உதவி செய்துவருகின்றோம்.
இன்றும் கூட எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களுக்கான புத்தகபைகள் கற்றல் உபகரனங்கள் என்பவை வழங்கி வைக்கப்பட்டன. அனைவரும் ஏழைமாணவர்களின் கல்விக்காக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் TRT தமிழ் ஒலி வானொலியை முன் உதாரணமாக கொண்டு செயற்படுவேம். அவர்கள் ஒவ்வொருவருடமும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நிதி உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் திரு உதயராசா, உதவிப்பிரதேச செயலாளர், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

SHARE