மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு வாழைச்சேனை வீதி பிள்ளையாரடி பகுதியில் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
காத்தான்குடியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற டொல் பீன்ரக வேனும் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேற்று இரவு 8.30 மணியளவில் பின்னையாரடி பகுதில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 3 பேரையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மட்டு தலைமைய பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்