கணவர் இறந்தவுடன் வேறு நபரை காதலித்த மனைவி.. நடந்த திருமணம்

154

பிரித்தானியாவை சேர்ந்த பெண்ணொருவர் கணவர் இறந்த சில வாரங்களில் வேறு நபருடன் டேட்டிங் சென்ற நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடாலியா என்ற பெண்ணுக்கும் டிம் மேடிலீ என்பவருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஓலிவர் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த டிம் மூன்று வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த சில வாரங்களிலேயே பவுல் என்பவருடன் டேட்டிங் செல்ல தொடங்கிய நடாலியா அவரை காதலிக்க தொடங்கினார்.

KENNEDY NEWS AND MEDIA

இது டிம்மின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து டிம்மின் சகோதரர் ஸ்டீவ் கூறுகையில், டிம் இறந்தபின்னர் எங்கள் குடும்பத்தினருடனான உறவை நடாலியா முறித்து கொண்டார்.

டிம் இறந்த சில வாரங்களிலேயே வேறு நபருடன் அவர் டேட்டிங் சென்றது எங்களுக்கு அதிர்ச்சியளித்தது, எங்கள் குடும்பத்தினரை அவர் வெறுக்கிறார், பேஸ்புக் நட்பில் இருந்து கூட எங்களிடம் இருந்து அவர் விடுபட்டுவிட்டார் என கூறினார்.

இது குறித்து நடாலியா கூறுகையில், நான் என் கணவருக்கு மரியாதை கொடுக்கவில்லை எனவும் அவரை மறந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

KENNEDY NEWS AND MEDIA

அது மிகவும் தவறு, டிம் மீண்டும் வரமாட்டார் என்பது எனக்கு தெரியும். நானும் எத்தனை நாட்கள் தான் இருட்டறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க முடியும்.

நான் கடந்தாண்டு என் காதலர் பவுலை திருமணம் செய்து கொண்டேன். அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.

SHARE