உற்சாகமாக மைதானத்தில் ஆட்டம் போட்ட இந்திய அணி வீரர்கள்

205

அவுஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாக நடனமாடினர்.

சிட்னியில் நடைபெற்ற இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

தொடரை வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் கோஹ்லியுடன் சேர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

SHARE