கண்டி – யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
குறித்த கட்டத்தில் சிக்கி தவித்த மூவரை காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்து ஸ்ரீ தலதாமாளிகைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்த கட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.