கட்டுகாஸ்தோட்டை புகையிரதப் பாலத்தின் கீழ் வயோதிபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுகாஸ்தோட்டை, நவயாலத்தென்னைப் பிரதேசத்தில் மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள புகையிரதப் பாதையின் கீழ் மேற்படி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பாலத்தில் இருந்து தவறி விழுந்துள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார அல்லது வேறு ஏதும் காரணங்களால் இம் மரணம் சம்பவித்துள்ளதா என்பது பற்றி இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.