கடவுளின் அவதாரம் என கருதி பாதுகாத்து வரும் ஏலியன் போல் தோற்றமளிக்கும் பசு

187

இமைகளின்றி ஒற்றைக்கண்ணுடன் ஏலியன் போல் காணப்படும் ஒரு பசுவை, கடவுளின் அவதாரம் என கருதி பாதுகாத்து வருகின்றனர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்கள்.

அந்த கன்றுக் குட்டி, ஒரு கண்ணுடன், இமைகளும் மூக்கும் இன்றி பிறந்ததும் அதன் தாய் அதை தள்ளி விட்டது.

ஆனால் மக்கள் அதை எடுத்து வளர்ப்பதோடு, அதை வணங்கினால் அதிர்ஷ்டம் என்று கூறி அதை பாதுகாத்து வருகின்றனர்.

அந்த அதிர்ஷ்ட பசுவைக் காண கூட்டம் அலைமோதுகிறதாம்.

வெளியான வீடியோ ஒன்றைப் பார்க்கும்போது சிறு பிள்ளைகளின் கார்ட்டூனில் வரும் ஒரு கதாபாத்திரம் போலவே காட்சியளிக்கிறது அந்த கன்றுக்குட்டி.

SHARE