3,000 அவுஸ்திரேலியரை தாக்கிய ஜெல்லி மீன்கள்

277

அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரைகளில் சுமார் 3,000 பேரை நச்சுத்தன்மை கொண்ட ஜெல்லி மீன்கள் தாக்கியுள்ளன.

இதனால் கோல்ட் கோஸ்ட், சன்ஷைன் கோஸ்ட் வட்டாரங்களில் உள்ள கடற்கரைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெல்லி மீன்களால் இதுவரை 3,595 பேர் தாக்கப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவலர்கள் சங்கம் கூறியது. வடகிழக்கிலிருந்து வீசும் பலத்த காற்றால் ஜெல்லி மீன்கள் கடலில் மக்கள் நீந்தும் பகுதிக்கு வந்துள்ளன.

SHARE