அம்பாறை மாவட்டத்தின் பாணம மற்றும் பொத்துவில் ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பிரதேசங்களில் கடலோர உயிர்காப்பு நிலையங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் மற்றும் பாணம கடலோர கரையோரப் பிரதேசங்களை நோக்கி இன்று அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதனால் அவர்களின் நலன் கருதியே கடலோர பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தும்முகமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பாணம ராகம்வெளி பீனட் பாம் மற்றும் பொத்துவில் ஊரணி பிரதேசத்தைச் சோ்ந்த கொட்டுக்கல் ஆகிய பிரதேசங்களில் உயிர் காப்பு பிரிவின்செயற்பாட்டாளா்களுக்கான கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, பிரதி பொலிஸ் மா அதிபர். நுவான் வெதசிங்க மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சமந்த விஜேசேகர லகுகல பிரதேச செயலாளர் எஸ்.எஸ்.அனுரத்த, பாணம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஜயசிங்க உள்ளிட்ட கடலோர உயிர் பாதுகாப்பு குழுவினர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.