விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

205

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று காலை  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் புகையிரத நிலைய வீதிக்கு செல்ல முற்பட்ட சமயத்தில் புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE