முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் அரசியல் மீள் வருகை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆபத்தானதா? இரணியன்

579

முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் களமிறக்கப்பட்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தற்பொழுதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் வகையில் தனக்காக ஒரு அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனுடைய  இரகசியவேலைத்திட்டங்கள் வடகிழக்கு எங்கிலும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினால் ஓரங்கட்டப்பட்டுள்ளது தற்போதைய கட்சிகளை தன்னுடன் சேர்ந்துக் கொண்டு தற்பொழுது  முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் களத்தில் இறங்கியுள்ளார். ஜனநாயக ரீதியாக ஒரு நபர் கட்சி மாறுவதும் கட்சி ஒன்றை அமைப்பதும் தவறான விடையம் அல்ல. ஆனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டு வெற்றி பெற்றவர். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன், மாவைசேனாதிராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டார்.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின்அடிப்படையில் வளிவிலகிப் போனதன் நிமித்தம் மக்களை இவர்கள் ஏமாத்துகின்றார்கள் என்ற நிலைப்பாட்டை இவர்கள் தமது கையில் எடுத்துக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கும் அதன்தலைமைக்கு எதிராகவும் செயற்பட ஆரம்பித்தார். கடந்த ஆண்டு 10ம் மாதம் மாகானசபை கலைக்கப்பட்டதன் பின்னர(காலம்நிறைவடைந்த பின்னர்) புளொட், தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எப் இன்னும் பல கட்சிகள் அவரைத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டனர். தலைமை தாங்குவது போன்று அவர் நடந்து கொண்டாலும் ஈபிஆர்எல்எப் உடனேயோ அல்லது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடனேயோ கூட்டுச் சேருவதென்பத தமது வெற்றியை பாதிக்கும் என்பதை அறிந்து கொண்ட முன்னால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தனது தனித்துவமான பாணியில் பயணிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக அனந்தி சரிதரன் அவர்களும்,முன்னால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுமே அதிகளவில் வாக்குகளைப் பெற்றவர்கள். ஆகவே தாம் இருவரும் தனித்துக் கேட்டாலும் வெற்றிபெறுவோம் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனாலும் ஒரு விடையத்தைப் பார்க்கவேண்டும். தமிழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் 22பாராளுமன்ற  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வோனஸ் ஆசனங்களாக மொத்தம் 25 பேர் தெரிவு
செய்யப்பட்டனர். அந்த நிலமை ஏன் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உருவாகவில்லை. அதற்கானகாரணம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.   தமிழீவிடுதலைப்புலிகளால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்காக நியமிக்கப்பட்ட அரசியல் வாதிகள் பா.அரியநேந்திரனைத் தவிர எவருமே மீண்டும்மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.

குறிப்பாக வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கிஷேhர், கனகரத்தினம், யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், கிழக்கு மாகான பாரளுமன்ற உறுப்பினர்களான வெள்ளிமலை, தங்கேஸ்வரி, பியதாச ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக அக்காலகட்டத்தில் செயற்பட்டதன் விளைவாக மக்கள் அவர்களைப் புறக்கனித்தனர். தேசிய வாதம் பேசி அரசியல் செய்கின்றனர் என்பதற்காக இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சம்பந்தன், மாவைசேனதிராஜா
போன்றவர்களால் விலக்கப்பட்டார்கள். ஆனால் தேரியம் பேசுகின்ற தமிழ் அரசியல் வாதிகள் எவரும் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இடமளிக்கப்படவில்லை.

இதனால் தனித்து களமிறங்கிய மேற்குறிப்பிடப்பட்டோர் படுதோல்வி அடைந்தனர். காரணம் என்னவெனறால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது. இதனை நாம் சிதைத்துவிடக் கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இன்னும் இருக்கின்றனர். அண்மையில் வடபகுதிக்கு
விஜயம் ஒன்றை மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சிதைவடைந்து
விடும் என்றும் விக்கினேஸ்வரன் அவர்களையே மக்கள் இனி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமையானது. தமிழ் அரசியல் தலைமைகள் இது தொடர்பாக ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு
தேவை ஏற்பட்டிருக்கின்றது.

அவ்வாறு இருக்கின்ற போது மகிந்தராஜ பக்சகவின்வினுடைய வீண் வருகையும் அதனுடன் ஒன்றிப்போகின்றது. ‘ “எத்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றிகொண்ட மகற்கு'” விக்னேஸ்வரன் அவர்கள் நன்றி மறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுகின்றார் என்பதே வெளிப்படையான உண்மை. எண்பதிலும் ஆசைவரும், ஐம்பதிலும் ஆசை வரும்  என்று தான் பழமொழியில் கூறுவார்கள். தற்போதைய நவீன காலத்தில் எண்பதிலும் ஆசை வரும் என்பது இன்றைய நவீன உலகம். எது எவ்வாறாக இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்தினால். சிதைக்கப்பட்டு விட்டால் அது இலங்கை வரலாற்றில் பாரிய வெற்றியாகக் கருதப்படும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடைய ஒவ்வொரு இலைச்சனைகளையும் அழித்து விடும் ஒரு நோக்கிலும் அவர்களது வரலாறுகள்
எழுதப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கிலேயும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதற்கு தமிழர் தரப்பில் பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற இன்றைய நிலைப்பாட்டில் அரசாங்கமானது மூவரைத் தெரிவு
செய்துள்ளது. சுமந்திரன், சம்பந்தன், விக்கினேஸ்வரன் இவர்களுள் ஒருவரே சிக்கிக் கொள்வார்கள். அரசியல் வாதிகள் காலத்துக்கு காலம் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக சுயலாப
அரசியலில் இருந்து செயற்படுவார்கள். ஆனால் தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒருவரும் ஆயுதப் போராட்டம் தொடர்பாக அதன் வரலாறுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்கவேண்டும். அவர்களின்
தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் எமது அரசியல் நிலைப்பாடுக்ள அமைந்துவிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் முன்னால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி
இணைந்து தேர்தல் கலத்தில் குதிப்பார்களாக இருந்தால் தமிழரசுக் கட்சியின் ஆறு ஆசனங்களைத் தவிர ஏனைய ஆசனங்கள் அணைத்தும் இவர்கள் கைப்பற்றுவார்கள். தமிழரசுக் கட்சியினுடைய அரசியல்
கேள்விக்குறி ஆக்கப்படும். ஆனால் மேல் குறிப்பிடப்பட்ட கட்சிகள் முறண்பாடு இன்றி ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்களா? என்பது மற்றுமொரு பிரச்சனை. தமிழர்கள் மத்தியில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு நலிவடைந்து வருகின்றது என்பது மேல் குறிப்பிடப்பட்ட கட்சிகளுடைய தனிப்பட்ட பிரச்சாரம் ரெலோ, புளொட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகுமா? என்பது மற்றுமொரு
கேள்வி? முன்னால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கமா? ஈபிஆர்எல்எப் பின் பக்கமான என்பது மற்றுமொரு கேள்வி? எந்த வகையிலும் ஈபிடிபி இணையப்போவது கிடையாது யாழ்ப்பாணத்தில் தனிப் பலத்துடன் ஈபிடிபியினர் வெற்றி பெறுவார்கள் அதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி விமர்சனம் கூறுபவர்கள் செத்த பாம்மை அடித்தவர்கள் என்பதுக்கு பொருத்தம்.
டக்கிளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப்புலிகளை அன்றும் எதிர்த்தார், இன்றும் எதிர்க்கின்றார். அவர் ஒரு கொலையாளி கடத்தல் காரர் என்பது கடந்த கால வரலாற்று உண்மை.

இருப்பினும் மத்தியில் கூட்டாச்சி, மானிலத்தில் சுய ஆட்சி என்பது அவரது திருவாசகம். அந்த ஆட்சியே தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஒருபுறம் இருக்க தமிழீழ விடுதலைப்புலிகளுடைய தேசியம் சுயநிர்ணய உரிமை எண்பதை முன் வைத்து அரசாங்கத்திடம் தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு செல்லும் பொழுது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து வருகின்றோம் என்ற நிலமை
தோற்றுவிக்கப்படுகின்றது. மீண்டும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாத வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுடைய அரசியல் நிலமை சாத்தியப்படுமா? அல்லது அவர் மீண்டும் பிறேமானந்தா
சுவாமியினுடைய ஆச்சிரமத்திற்கு சென்று தியானத்தில் ஏற்படும் நிலையே தோற்றுவிக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலமைச்சராக விக்கினேஸ்வரனைக் கொண்டு வந்ததுக்கு தாம் வெட்கித் தலைகுனிவதாக தமிழரசுக் கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார். தனித்துவமான பிரச்சாரங்களை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் மேற்கொள்ளப்படுகின்ற பொழுதுசிங்களப்பேரினவாதத்துடன் இரண்டரைக் கலந்தவர் என்பது பிரச்சாரங்களில் முன்னெடுக்கப்படும். இதனால் அவருக்கான வாக்கு வங்கி சரிவேற்படும். இதனையும் முதலமைச்சர் கவணத்தில் கொண்டு செயற்படுவது அவசியம்.அதனை
விடவும் அரசியல் வாழ்விலிருந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் ஒதுங்குவாராக இருந்தால்அவர் நீண்ட ஆயுளோடு நிம்மதியாக வாழ முடியும். எம்மைப் பொருத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் நோக்கிலேயும், அதனை வராலாற்றில் இல்லாதொழிக்கும் நோக்கிலையும் அரங்கத்தின் ஏஜென்டுகளாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் செயற்படுகின்றார் என்பது புலப்படும்.

 

SHARE