பிரித்தானிய இளவரசி மெர்கலை பார்த்து நீங்கள் குண்டு பெண் என வயதான பெண்ணொருவர் கூறியதற்கு அவர் சிரித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் மனைவி மெர்க்கல் தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் Mayhew எனப்படும் விலங்கு நல அறக்கட்டளைக்கு மெர்க்கல் வருகை தந்தார். அந்த அறக்கட்டளைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த சில நபர்கள் அங்கு வந்தனர்.
அப்போது Gothrine McEachrom என்ற வயதான பெண் மெர்க்கலிடம் வந்து நீங்கள் குண்டு பெண் என கூறினார்.
Gothrine-னின் கருத்தை கேட்டு மெர்க்கல் கோபமடைவார் என பலரும் நினைத்தனர். ஆனால் அவரோ சிரித்து கொண்டே, நான் உங்கள் கருத்தை எடுத்து கொள்கிறேன் என கூறினார்.
பின்னர், Gothrine மெர்க்கலிடம், உங்களுக்கு விரைவில் ஆண் குழந்தை பிறக்கும் என நினைக்கிறேன் என கூறினார்.
அதற்கு பதிலளித்த மெர்க்கல், என் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் எனக்கு தெரியாது, இதில் எல்லோரும் ஆச்சரியப்பட போகிறோம் என தெரிவித்தார்.
இதன்பின்னர் அங்கிருந்தவர்களுடன் உரையாடிய மெர்க்கல் விலங்குகள் அறக்கட்டளையில் இருந்த நாய்களை கொஞ்சி மகிழ்ந்தார்.