இன்றைய அவசர உலகில் பலரும் தொப்பை பிரச்சினையால் அன்றாடம் கஷ்டப்படுவதுண்டு.
இதற்கு நம் வழிகளில் இன்று போராடி கொண்டு தான் உள்ளோம். இதற்கு நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி உபயோகிக்கமால் இயற்கை முறையில் சிறந்த வழிகளை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
அந்தவகையில் தொப்பையை 4 நாட்களில் கரைக்கும் ஓர் அற்புத பானத்தை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- துருவிய இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
- வெள்ளரிக்காய் – 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
- எலுமிச்சை – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
- புதினா இலைகள் – 12
- தண்ணீர் – 8 டம்ளர்
செய்முறை
இரவில் படுக்கும் முன், ஒரு போத்தலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
இந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை 4 நாட்கள் காலையில் எழுந்ததும் குடித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.
முக்கியமாக இந்த பானத்தைப் பருகும் 4 நாட்களும், நல்ல ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதைக் காணலாம்.
இந்த பானத்தை வெறும் வயிற்றில் 4 நாட்கள் குடித்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.