முழங்கை காயத்தால் தொடரில் இருந்து விலகிய டேவிட் வார்னர்?

594

ஆஸ்திரேலியாவின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்த டேவிட் வார்னருக்கு போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை சொந்த நாடு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வார்னர் தற்போது ஒருவருட தடையில் இருக்கிறார். இதனால் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடி வருகிறார்.

சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்,‘‘காயம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. ஆஸ்திரேலியா திரும்பும் வரை சியால்ஹெட் அணிக்காக அவர் 18 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெறும் ஆட்டத்தில் வார்னர் தொடர்ந்து விளையாடுவார்’’ என தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே ஸ்மித் முழங்கை காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக டேவிட் வார்னரை முன்னதாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

SHARE