பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் ! இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு.

604

இனந்தெரியாத ஒருவரின் சடலமொன்றினை, மகியங்கனைப் பொலிசார் இன்று காலை மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்தே, குறித்த சடலம் மகியங்கனையில் மீட்கப்பட்டது.

35 வயதை மதிக்கத்தக்க இந்நபர்,அடையாளம் காண பொது மக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

இச் சடலம் தற்போது, மகியங்கனை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மகியங்கனைப் பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.

SHARE