வ/சுந்தரபுரம் அ.த.க. பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்கான கால்கோள் விழா

266
பாடசாலையில் 17-09-2019 அன்று அதிபர் திரு.செ.ஜேசுநேசன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிக்கு கால்கோள் விழா மிகவும் சிறப்பாக பாடசாலை சமூகத்தால் கொண்டாடப்பட்டது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா கல்வியல் கல்லூரி ஓய்வு நிலை பீடாதிபதி திரு.கு.சிதம்பரநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.பா.லம்போதரன் அவர்களுடன் செயலாளர் திரு.தி.கார்த்திக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
தரம் 1ற்கு மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். அவர்களுக்கு தரம் 2 மாணவர்கள் மாலை அணிவித்து அவர்களின் கைகளினை பிடித்து கொண்டு அழைத்து சென்ற நிகழ்வும் அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் அத்தோடு அதிபரினதும் சிறப்பு விருந்தினர் மற்றும் பிரதம விருந்தினர்களின் உரைகளும் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடதக்க அம்சமாகும்.
தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக பாடசாலையின் சங்கீத பாட ஆசிரியரான திருமதி A.பாலகுமார் அவர்களினால் பாடப்பட்ட பாடசாலைக் கீத இறுவட்டு பிரதம விருந்தினரால் வெளியீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
SHARE