குளவிக் கொட்டுக்கு இலக்கான 128 மாணவர்கள்

621

கடுகஸ்தோட்டை பாடசாலையொன்றுக்கருகில் காணப்பட்ட விளையாட்டு மைதானத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 128 மாணவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 128 மாணவர்களில் 88 மாணவர்கள் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையிலும், ஏனைய 40 மாணவர்கள் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 4 மாணவர்களும், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாணவர்களும் வீடுதிரும்பியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

SHARE