ஹெரோயினுடன் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஐவர் கொழும்பில் கைது.

289

சட்டவிரோதமான முறையில் ஹொரோயின் போதைப்பொருட்களை தம்முடன் வைத்திருந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடரிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் ஆயிரது 80 மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிலோ கிராம் ஹொரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அமெரிக்கர் இருவர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஒருவர் உட்பட  ஐவரை பொலிஸார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிகாரிகள் ஒன்றிணைந்து குறித்த விடயம் சம்பந்தமாக தகவல்கள் பெற்று கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE