கூகுளுக்கு எதிராக பல மில்லியன் யூரோ அபராதம்

357

அண்மைக்காலமாக முன்னணி இணைய நிறுவனங்களுக்கு எதிராக பாரிய அளவில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பிரதான காரணங்களாக பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துதல், அவர்களின் தகவல்களை கசிய விடுதல் போன்றன காணப்படுகின்றன.

இதேபோன்றதொரு தவறால் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக தற்போது பாரிய தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இவ் அபராதத்தினை பிரான்ஸின் தரவுப் பாதுகாப்பு மையம் விதித்துள்ளது.

குறித்த அபராதத் தொகையானது 50 மில்லியன் யூரோக்களாக இருக்கின்றது.

இது 56.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமனான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE