தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அதிகாலை நேரங்களில் அடர்பனி மூட்டம் இருப்பதால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை ஒளிர விட்ட படி வாகனங்கள் மெதுவாக செல்வதை காண முடிந்தது. கடும் பனி மூட்டத்தால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் 21 ரயில்கள் இன்று தாமதம் ஆகின.